உள்ளூர் செய்திகள்

பின்னோக்கி நடந்து சிறுவன் சாதனை

Published On 2022-12-01 08:37 GMT   |   Update On 2022-12-01 08:37 GMT
  • ராஜபாளையத்தில் பின்னோக்கி நடந்து சிறுவன் சாதனை படைத்தான்.
  • இவனது சாதனையை நோபல் உலக சாதனை ஆசிய (நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்) புத்தகத்தில் பதிவு செய்தனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பஸ் கம்பெனியின் உரிமையாளர் முத்துராம்குமார்ராஜா-ஜெய் ஹரிணி தம்பதியினரின் மகன் ரத்தினஜெய்ராஜா (வயது8). இவர் பயிற்சியாளர் அய்யப்பன் உதவியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் ராஜபாளையம் சின்மயா வித்தியாலயா பள்ளி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி நடந்து பாக்ஸிங் செய்தவாறு சாதனை நிகழ்த்தினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரத்தினஜெய்ராஜா சாதனையை நோபல் உலக சாதனை ஆசிய (நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்) புத்தகத்தில் நடுவர்கள் ரஞ்சித், பரணிதரன் ஆகியோர் பதிவு செய்தனர். சாதனை மாணவர் நடுவர்கள் முன்னிலையில் 8 ஆயிரத்து 130 முறை பாக்ஸிங் செய்து 1 மணி நேரம் 4 நிமிடத்தில் 5 கிலோமீட்டர் பின்னோக்கி நடந்து சாதனை படைத்தார். மாணவருக்கு சான்றிதழ்களை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வழங்கினார்.

Tags:    

Similar News