மனைவியை தாக்கிய அரசு என்ஜினீயர் மீது வழக்கு
- விருதுநகர் அருகே மனைவியை தாக்கிய அரசு என்ஜினீயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- அவர் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தோப்பு பட்டியை சேர்ந்தவர் பர மேஸ்வரன். பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மகள் எழில்ராணி (வயது 31). இவருக்கும், ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (37) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
தர்மலிங்கம் தஞ்சாவூரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
ஊருக்கு வரும்போது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் எழில்ராணி புகார் செய்தார்.
போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மீண்டும் தர்மலிங்கம் குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் எழுதி கொடுத்துள்ள னர்.
இதையடுத்து எழில்ராணி பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்து விட்டார். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து ஊருக்கு வந்த தர்மலிங்கம் குழந்தைகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தர்மலிங்கம் மனைவியை அடித்து உதைத்து மாமனாரின் பெட்டிக்கடையையும் சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் எழில்ராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.