பெண் முன்னேற்றத்திற்கு முதல்-அமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
- பெண் முன்னேற்றத்திற்கு முதல்-அமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
- புதிய கடனுதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தள்ளுபடிச் சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் 476 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 4497 பயனாளிகளுக்கு ரூ.7.9 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 40 மகளிர் சுய உதவி குழுக்க ளில் உள்ள 450 பயனாளி களுக்கு ரூ.2.35 கோடி மதிப்பிலான புதிய கடனு தவிகளையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஓரு காலத்தில் பெண் பிள்ளைகள் பெறுவது சுமை என்ற நினைத்த காலம் மாறி தற்போது பெண்கள் சம உரிமை பெற்று ஆண்களைவிட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
இதற்கு காரணம் பெரி யார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தான். பெண்களுக்கான உரிமை, கல்வி, விதவை மறுமணம், சொத்துரிமை, பெண்களுக்கான சமத்துவம் கிடைக்க பல்வேறு சமுதாய சீர்திருந்தங்களை செய்வதால் தான் அவர்கள் வழிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கும், சமத்துவதிற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசி னார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், ஸ்ரீவில்லி புத்தூர் நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன், ராஜபாளை யம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ஸ்ரீவில்லி புத்தூர் ஊராட்சிய ஒன்றியக்குழுத் தலைவர் ஆறுமுகம், ராஜபாளைமய் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிந்துமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.