மீண்டும் சாப்பிட தூண்டும் சாக்லெட்டும் போதைதான்-உதவிப்பேராசிரியர்
- மீண்டும் சாப்பிட தூண்டும் சாக்லெட்டும் போதைதான் என விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார்.
சிவகாசி,
சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம், பெண்கள் முன்னேற்ற அமைப்பு பகுதி -5, நுண்கலைகள் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து போதைப்பொருள் விழிப்பு ணர்வு கருத்தரங்கை நடத்தின.
கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறிய தாவது:-
போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்களின் வகைகள், அவற்றின் தீமைகள், அதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் அதுவும் போதைதான். நாம் சாப்பிடும் சாக்லேட் வகைகளை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டுவதும் ஒரு வகை போதைதான்.
போதைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தினால் சரிவர உணவு உண்ண முடியாது. மனச்சோர்வு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். பயம் ஏற்படும். உடல் மெலியும், குடல்புண், வாய்ப்புண் ஆகியவை உண்டாகும் நாளடைவில் மிகப்பெரிய மனநோயாளியாக மாற்றும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
முன்னதாக இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் பாண்டிக்குமார். வரவேற்றார். தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார். முடிவில் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் சிவகணேஷ் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை தலைவர் அமுதா, பெண்கள் முன்னேற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபாதேவி. பகுதி-5 குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆகியோர் செய்திருத்தனர்.