உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

Published On 2023-10-29 08:30 GMT   |   Update On 2023-10-29 08:30 GMT
  • கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
  • புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை மூலம் டி.மானகசேரி கிராமத்தில் தரிசு நிலங்களில் செம்மை நெல் சாகுபடி எந்திரம் மூலம் நடைபெற்று வரும் நடவு பணிகள், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் நடவு செய்யப் பட்டுள்ள கரும்புகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குதிரைவாலி விதைகள், ரூ.42 ஆயிரம் மானியத்தில் சுழல் கலப்பையும், ரூ.2,500 மானியத்தில் நெல் விதைக்கும் கருவியையும், ரூ.6 ஆயிரம் மானியத்தில் சோளம் இடு பொருட்கள், பண்ணை கருவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லியில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள அங்கன் வாடிகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.அங்கு சேதமடைந்த கட்டி டங்களை புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். 

Tags:    

Similar News