உள்ளூர் செய்திகள் (District)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்ததிருப்பாவை பாசுரங்கள் விண்ணப்பித்தல் நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு பேசினார்.

திராவிட வேதம் என்று அழைக்கப்படுவது நாலாயிர திவ்ய பிரபந்தம்-அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

Published On 2023-01-08 08:56 GMT   |   Update On 2023-01-08 08:56 GMT
  • திராவிட வேதம் என்று அழைக்கப்படுவது நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
  • ஆண்டாள் சந்நிதியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் திருப்பாவை பாசுரங்கள் விண்ணப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள ஆடிப்பூர மண்ட பத்தில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம், தமிழ்நாடு இசை கல்லூரியை சேர்ந்த 84 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட 'நாதம்- 108' குழு சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்கள் இசையுடன் பாடப்பட்டது.

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக துணை வேந்தர் சவுமியா, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர் முத்துராஜா, ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சி தலைவர் ரவி கண்ணன், ஒன்றிய தலைவர் மல்லி ஆறுமுகம், சுந்தரேஸ்வரி, கல்வியல் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது கூறியதாவது:-

ஆண்டாள் சந்நிதியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடும் வாய்ப்பு கிடைத்தது இசைக்கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பான ஒன்று. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் வகுத்த இசைக் கச்சேரி முறையை பின்பற்றி நமது குழந்தைகள் அழகாக திருப்பாவை பாடினார்கள். தேனினும் இனிய தமிழ் பாடல் கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம் திராவிட வேதம் என போற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News