தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
- ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-
தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி./எஸ்.டி.) தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர் கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவை யான வளங்களைப் பெறு வதை எளிதாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் தொழில் முனை வோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும்.
இந்த திட்டத்தில் எந்திரங்கள் மற்றும் உபகர ணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழி வகை செய்யப்பட்டள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்க ளுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இந்த திட்டத்தில் வழிவகை இல்லை.
இந்த திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு எந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், கணிணி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் இந்த திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம், மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற தொலைபேசியிலோ அணுகலாம்.
இந்த திட்டத்திற்கான மாபெரும் விழிப்புணர்வு முகாம் வருகிற 30-ந் தேதி அன்று மாவட்ட கூட்ட அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.