இல்லம் தேடி கல்வி தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
- போட்டியில் வெற்றி பெற்ற தொகையை மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வழங்கினர்.
- மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மையங்களுக்கு வரும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, பன்முகத் திறன் கொண்டவர்களாக திகழ வேண்டும் என்பதற்காக இந்த மையங்களில் பல்வேறு கற்றல் சார்ந்த செயல்பா டுகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 'குறும்படம் கொண்டாட்டம்' என்ற போட்டி இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாணவர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் தாங்களே சிந்தித்து கதையை கூறி, அதனை மையத்தின் தன்னார்வலர் மற்றும் ஆர்வமுள்ள மாண வர்களின் துணையுடன் குறும்படமாக தயாரித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றி யத்தின் தன்னார்வலர்கள் மடவார்வளாகம் சிவகாமி, திருவண்ணாமலை முத்துச்செல்வி ஆகியோரது குறும்படங்கள் மாவட்ட அளவில் முறையே 2 மற்றும் 3-ம் இடம் பெற்று மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டது.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தற்காக தன்னார் வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி சார்பில் தலா ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி வழங்கினார்.
தன்னார் வலர்கள் சிவகாமி, முத்துச் செல்வி ஆகியோர் தங்க ளுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை மையத்திற்கு வரும் மாண வர்களுக்கு கற்றலுக்கு உதவியாக இருக்கும் வகையில் கற்றல் உப கரணங்களை வாங்கி கொடுத்தனர்.
குறும்பட போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது.
தன்னார்வலர் சூர்யா வர வேற்றார். தன்னார்வலர்கள் மகாலட்சுமி, கஸ்தூரி, சித்ரா, சிவரஞ்சினி, கவிதா ஆகியோர் பேசினர். கல்வியாண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட குறுவளமைய குழு தலைவர்களாக செயல்படும் 10 தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் சொந்த செலவில் ரொக்கப் பரிசு வழங்கினார்.
மேலும் மாவட்ட அளவில் குறும்படம் தயாரிப்பில் வெற்றி பெற்று பரிசு பெற்ற தன்னார் வலர்களும் பாராட்டப் பட்டனர்.