- ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் பயணிகள் நிழற்குடையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை அருகில் பொதுமக்களின் நலன்கருதி ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.
அதேபோல் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி பஸ் பராமரிப்பு மைதா னத்திற்கு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழா நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை யையும், பேவர் பிளாக் தளத்தையும் திறந்து வைத்தார்.
அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறை மூலம் பெண்களுக்கு கட்டண மில்லா பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்து சிறப்பான சேவை செய்துள்ளார். இந்த சேவையை பெண்கள் போற்றி வருகின்றனர். அதுபோல் ராஜபா ளையம் தொகுதியில் அரசின் வழிகாட்டுதலின்படி 2 டிப்போ மேலாளர்களும் பஸ் சேவையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்' என்றார்.
இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் மாரியப்பன், பொது மேலாளர் சிவலிங்கம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், துறை மேலாளார் மாரி முத்து, ஜீவா, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கமல கண்ணன், தவம், கவுன்சிலர் ஜான்கென்னடி, வார்டு செயலாளர் குருசாமி, முனியராஜ், நாகேசுவரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.