- கபடி அணிகளுக்கு பரிசுகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் ஊராட்சி செவன் லயன்ஸ் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியையும், ராஜ பாளையம் ஆவாரம்பட்டி யாழினி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கபடி போட்டியை யும் எம்.எல்.ஏ. தங்கப் பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுத் துறைக்கு புத்துயிர் கொடுத்து அதனை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில் நமது முதலமைச்சரும், விளை யாட்டுத்துறை அமைச்சரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பொன்னுத்தாய், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.