தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி வழங்கல்
- 4,157 தொழில் முனைவோர்களுக்கு ரூ.510 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
- அமைச்்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகரில் தமிழக அரசின் பல்வேறு துறைகள், திட்டங்கள், தாட்கோ மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் கடன் வசதி எளிமையாக்கல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 915 தொழில் முனைவோர்க ளுக்கு ரூ.114.51 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான அனுமதி ஆணைகள் மற்றும் காசோலைகளை வழங்கி னார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 480 வங்கி கிளைகள் மூலம் 2023-2024-ம் ஆண்டு முதல் காலாண்டில் 3242 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.396.24 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2023-2024 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டின் முதல் மாதத்தில் 915 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.114.51 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், முதன்மை மண்டல மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தூத்துக்குடி) நாகையா, உதவி பொது மேலாளர்(கனரா வங்கி, தூத்துக்குடி) சுரேந்திர பாபு, மண்டல மேலாளர்(பாரத் ஸ்டேட் வங்கி, தூத்துக்குடி) செந்தில்குமார், மண்டல மேலாளர்(இந்தியன் வங்கி, காரைக்குடி) தாமோதரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச் செல்வன், விருதுநகர் வர்த்தக தொழிற்சங்க தலைவர் யோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.