உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

ராகுல்காந்தி பதவி பறிப்பு அநீதியானது-மாணிக்கம்தாகூர் எம்.பி.

Published On 2023-04-16 07:47 GMT   |   Update On 2023-04-16 07:47 GMT
  • ராகுல்காந்தி பதவி பறிப்பு அநீதியானது என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
  • 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 140 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல் காந்தி பதவிபறிப்பு என்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். கர்நாடக மாநிலம் கோலார் சட்டசபை தொகுதியில் பேசிய பேச்சின் அடிப்படையில் குஜராத்தில் தீர்ப்பு பெற்று அவர் வீட்டை காலி செய்யும் வரை பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை இனி மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வோம். கர்நாடக மாநில சட்ட சபையின் போதும் இந்த பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொள்ளும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை தி.மு.க.வினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை தி.மு.க.வினர் சட்டபூர்வமாக எதிர்கொள்வர்.

மத்திய அரசு சி.ஆர்.பி.எப். தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மறியலில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வெயிலுமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News