வட்டார போக்குவரத்து அலுவலகம் விரைவில் செயல்படும்
- வட்டார போக்குவரத்து அலுவலகம் விரைவில் செயல்படும்.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையம் தொகுதியில் புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்க தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது,
அதனைத்தொடர்ந்து அலுவலுகம் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டு அமிழ் ஹோட்டல் அருகில் இடமும் தேர்வு செய்து அதற்கான அனுமதி பெற கோப்புகள் சென்னையி லுள்ள போக்கு வரத்து துறை ஆணையகரத்திற்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1-ந்தேதி போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்து விரைவில் அனுமதி வழங்குமாறு மனு அளித்து வலியுறுத்தினேன், அதற்கு ஆணையர் உடனடியாக கோப்பை ஆய்வு செய்து உள்துறை செயலாளர் அமுதாவிற்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை வெளியிட்டு விரைவில் ராஜபாளையம் தொகுதியில் புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகத்தை தற்காலிகமாக வாடகை கட்டித்தில் தொடங்கப்படுமென என்னிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்துதல் கட்டிடப்பணி எனது கண்காணிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஆறுமாத காலத்தில் கட்டி டப்பணி முழுமையடைய உள்ளது. ஆகவே மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் இருக்கும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், இருதய அடைப்பு ஏற்பட்டால் உயிர்காக்கும் மருந்து பொருட்கள், ஆஞ்சியோ கருவி உள்பட அனைத்து மருத்து வக்கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன், மருத்து வக்கருவிகளை கையாளும் மருத்துவப்பணியாளர்கள் என தலைமை மருத்துவ மனையி லுள்ள அனைத்து வசதிகளையும் ராஜபா ளையம் அரசு மருத்துவ மனையில் திறப்பு விழா விற்கு முன்னதாகவே ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அதற்கு அரசு முதன்மை செயலாளர் கண்டிப்பாக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.