பள்ளி மாணவர்கள் செல்லும்சாலையை சீரமைக்க கோரிக்கை
- அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் செல்லும்சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ெரயில்வே பீடர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
பாலையம்பட்டி,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ெரயில்வே பீடர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சிமெண்டு சாலை முழுவதும் சேதமடைந்து கற்கள் வெளியே தெரியும் அளவுக்கு சாலை சேதமடைந்துள்ளது.
இந்தச் சாலையை தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளில் இந்த சாலை வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.மோசமான சாலையால் பள்ளி மாணவர்களின் சைக்கிள்களும், பொதுமக்களின் இருசக்கர வாகனங்களும் பழுதடைகின்றன. மழைக்காலங்களில் இந்த சாலையில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.