- நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.
விருதுநகர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கருணாகர பிரபு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி துணை சேர்மன் செல்வமணி, விருதுநகர் கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசுதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
முகாமில் நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த சர்க்கரை அளவ பரிசோதனை, நவீன இசிஜி பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவைப்படுவோருக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன. யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 229 நெசவாளர்கள் பங்கேற்றனர். நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.