உள்ளூர் செய்திகள்

பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா பேசினார்.

சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-08-09 09:00 GMT   |   Update On 2022-08-09 09:00 GMT
  • சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தினர்.
  • திட்டப்பணிகளை விரைவாக முடிக்க இந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது.

ராஜபாளையம்

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 84-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையில் ராஜபாளையம்- தென்காசிரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா திருமணமண்டபத்தில் நடந்தது.

முதன்மை சிறப்பு விருந்தினராக இதயம் வி.ஆர். முத்து கலந்து கொண்டு பேசினார். துணைத்தலைவர் பத்மநாபன் வரவேற்றார். செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் நாராயணசாமி முதன்மை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

ராஜபாளையம் தொழில் வர்த்தகசங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் வணிகர் நலனை மட்டுமல்லாது பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் தாமதமாக நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிகள், தாமிரபரணி குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, புறவழிச்சாலை ஆகிய திட்டப்பணிகளை விரைவாக முடிக்க இந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது.

மற்ற மாநகராட்சி, நகராட்சி சொத்து வரியை விட ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி அதிகமாக இருப்பதால் அடிப்படை சொத்து வரி விகிதத்தை குறைத்து அதற்கு பின் சொத்து வரியை நிர்ணயிக்கும் படி தொடர்ந்து கோரி வருகிறோம்.

போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ெரயில்வே சுரங்க பாதை பணிகளையும் விரைந்து முடிக்க வலியுறுத்தி வருகிறோம். கூடுதல் ெரயில் வசதிகள், மின் மயமாக்கல் பணி இவற்றையும் விரைந்து முடிக்க கோரி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. புதிய நிர்வாகிகளை தொழிலதிபர் டைகர்சம்சுதின் முன்மொழிந்தார். கார்த்திக் வழிமொழிந்தார்.

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க தலைவராக பி. ஆர். வெங்கட்ராமராஜா, துணைத்தலைவர்களாக என் .கே. ஸ்ரீகண்டன்ராஜா, ஆர்.பத்மநாபன், செயலாளர்களாக எம் .சி. வெங்கடேஸ்வரராஜா, ஆர்.நாராயணசாமி, இணைச் செயலாளராக கே.மணிவண்ணன், பொருளாளர் பி.எம். ராமராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இணை செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் கிளை சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News