உள்ளூர் செய்திகள்

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்கள்.

தென்னந்தோப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2022-12-17 08:05 GMT   |   Update On 2022-12-17 08:05 GMT
  • ராஜபாளையம் அருகே தென்னந்தோப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன.
  • யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

 ராஜபாளையம் 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியையொட்டி செல்ல பிள்ளை ஊரணி அருகே ராமகிருஷ்ண ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்தன.

அவை அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை அடியோடு பிடுங்கி சேதப்படுத்தியது. அதே போல் அந்த பகுதியில் இருந்த பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

காய்ப்பு பருவத்திற்கு வந்த பாதி மரங்களும், 2 வருடங்கள் வளர்த்த தென்னங்கன்று களும் யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News