உள்ளூர் செய்திகள் (District)

நடமாடும் மதி அங்காடிகளில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-05-27 07:50 GMT   |   Update On 2023-05-27 07:50 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ள நடமாடும் மதி அங்காடிகளில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விற்பனை செய்ய விருதுநகர் மாவட்டத்தில் நடமாடும் மதி அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது.

அதன்படி விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு 3 நடமாடும் மதி அங்காடிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் மதி அங்காடிகளை இயக்க பின்வரும் விதிமுறை களுக்குட்பட்டு பயனாளிகள் தேர்வு செயயப்பட உள்ளனர். பயனாளிகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.

மகளிர் மாற்றுத்திறனாளி கள், ஒற்றைப்பெற்றோர், கணவரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள், விதவை மாற்றுத்திறனாளி யாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் பயனாளிகள் சார்ந்த சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன்அனுபவ முடையவராக இருக்க வேண்டும்.

உறுப்பினர் சார்ந்த சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓராண்டிற்கு மேல் நிறைவடைந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்மீது வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வராக்கடன் ஏதும் இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகள் பெற்றிருக்கும் விருப்ப முள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வளாகம், விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News