உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு தகவல் குறித்த கையேடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

அரசு கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி-கருத்தரங்கம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-11-18 09:50 GMT   |   Update On 2022-11-18 09:50 GMT
  • கடனுதவி பற்றி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சகுந்தலா உரையாற்றினார்.
  • கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கண்மணி ஜான் ஆப் ஆர்க் அனைவரையும் வரவேற்றார்.

திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார்.

பட்டப்படிப்புக்கு பின்புள்ள உயர்கல்விகள் குறித்து குந்தவை நாச்சியார் கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி உரையாற்றினார்.

அரசு போட்டி தேர்வுகள், பயிற்சி முறைகள் குறித்து உதவி இயக்குனர் ரமேஷ் குமார் சிறப்புரையாற்றினார்.

சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் அரசு கடனுதவி பற்றி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சகுந்தலா உரையாற்றினார்.

தொடர்ந்து, வேலைவாய்ப்பு தகவல் குறித்த கையேடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

முடிவில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேல் நன்றி கூறினார்.

குந்தவை நாச்சியார் கல்லூரி சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News