உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிட நலப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

Published On 2023-08-24 08:59 GMT   |   Update On 2023-08-24 08:59 GMT
  • கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிட நலப் பள்ளியில் சரியில்லாத உணவை மாணவ மாணவிகளுக்கு கொடுத்ததால் வாந்தி, மயக்கம்
  • பாதிக்கப்பட்ட மாணவர்களை எம்எல்ஏ கண்ணன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.


ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் மதிய உணவு புளி சாதம் முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 மாணவிகள் 30 மாணவர்களும் பயின்று வருகின்றனர் இவர்களில் 55பேர் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.வழக்கம்போல் இன்று மதிய உணவு சமைப்பதற்கு தயார் செய்தபோது அரிசி சரியில்லை என்று சமையல் செய்பவர் தலைமை ஆசிரியர் புஷ்பவல்லியிடம் தெரிவித்தனர். பரவாயில்லை நாளை பார்த்துக் கொள்ளலாம் அதை சமையல் செய்து மாணவர்களுக்கு கொடுங்கள் எனக் கூறியதாக தெரியவந்துள்ளது. மதியம் மாணவர்களுக்கு புளி சாதமும் முட்டையும் வழங்கப்பட்டன. சத்துணவு அமைப்பாளர் இளமதி சமையலர் சரஸ்வதியும் சமையல் உதவியாளர் சபிதாவும் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கினர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சாப்பிட்ட சில மணி நேரத்தில் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார் உடனடியாக ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் வாந்தி மயக்கம் எடுத்துள்ளனர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து அதில் 25 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அங்கு மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் தாசில்தார் துறை மற்றும் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்று தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் கதறி அழுவது பெரும் சோகத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.




Tags:    

Similar News