உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

அதிகாரிகள் ஆய்வு பணியால் முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2023-07-21 04:33 GMT   |   Update On 2023-07-21 04:33 GMT
  • பைப் லைனில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
  • இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. மேலும் அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு பருவமழையின்போது அணையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.

தற்போது தென்மேற்கு பருவமழை அவ்வப்போது மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 119.85 அடியாக உள்ளது. 613 கன அடி நீர் வருகிறது. அணையின் ஷட்டர் பகுதியில் இருந்து போர்பே டேம் சுரங்கப்பாதை மற்றும் அங்கிருந்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் வரை உள்ள பைப் லைனில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

வைகை அணையின் நீர்மட்டம் 49.66 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு இல்லை.

பெரியாறு 1.4, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 2, சண்முகாநதி அணை 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News