குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
- பட்டமங்கலம்- புதுச்சேரி வாய்கால் அருகே ராட்சத பைப்லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
- உடைப்பு காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.
நாகப்பட்டினம்:
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் வருகிற குடிநீர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள மெயின் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலமாக கீழ்வேளூர், திருக்குவளை வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பட்டமங்கலம் புதுச்சேரி வாய்கால் அருகே ராட்சத பைப் லைனில் திடீர் என உடைப்பு ஏற்பட்டது குடிநீர் வீணாகி வருகிறது.
அதிக அழுத்தத்துடன் குழாயின் பக்கவாட்டில் இரண்டு இடங்களில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரானது அருகில் உள்ள வாய்காலில் கலந்து பயனற்று போவதாகவும் கிராம குற்றம் சாட்டியுள்ளனர்.
குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.