வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
- நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகி செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பழ கன் தலைமை தாங்கினார்.
- முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த செஞ்சி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சி- திருவண்ணா மலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகி செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பழ கன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக் தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலை சந்திக்க தொகுதியில் உள்ள பாக முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் பணியில் பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். நாம் முதல்-அமைச்சர் செய்துள்ள அனைத்து திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தால் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியினர் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ் செல்வன், மாசிலாமணி, மாநில தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர் அமுதா ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செல்வி ராம. சரவணன், மாவட்ட மகளிர் .அணி திலகவதி, மாவட்ட மாணவர் அணி பிரசன்னா, அனைத்து ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.