உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட வாலிபர் வீட்டில் சோதனை முடித்து வெளியே வரும் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார்.

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர் வீட்டில் நடத்திய சோதனை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்வோம்

Published On 2022-10-10 07:09 GMT   |   Update On 2022-10-10 07:09 GMT
  • அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
  • போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி

கன்னியாகுமரி:

மண்டைக்காடு அருகே கருமங்கூடலை சேர்ந்தவர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55). கடந்த மாதம் 25-ந் தேதி இரவு இவரது வீட்டுமுன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் 2 பெட்ரோல் வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது.ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேதமடைந்தது. குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குளச்சல் இலப்பைவிளை பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கோர்ட் அனுமதி பெற்று நேற்று குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையி லான போலீசார் இலப்பை விளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.

சோதனையின்போது குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.சோதனைகள் அனைத் தும் வீடியோவில் பதிவுச்செய்யப் பட்டது. இந்த திடீர் சோதனையின்போது அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.தகவலறிந்து பொதுமக்களும் முஸ்ஸாமில் வீட்டு முன் திரண்டனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சோதனை முடிந்து வெளியே வந்த டி.எஸ்.பி. தங்கராமனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது சோதனை அறி க்கைகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்' என கூறினார். மேலும் தலைமறைவாகியுள்ள மணவாளக்குறிச்சி பகு தியை சேர்ந்த ஆறான்வி ளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலி மான் இவர்களின் வீடுகளிலும் குளச்சல் போலீஸ் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் சோதனை நடந்தது.

Tags:    

Similar News