உள்ளூர் செய்திகள்

வாரவிடுமுறை: குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு ரெயில்

Published On 2024-08-15 07:11 GMT   |   Update On 2024-08-15 07:11 GMT
  • வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
  • சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

ஊட்டி:

சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரதினம், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் நாளை (16-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். இதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில் 5.55 மணிக்கு குன்னூர் வரும். மேற்கண்ட ரெயில்கள் முதல் வகுப்பில் 80 இருக்கைகள் மற்றும் 2-வது வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும்.

மேலும் ஊட்டி-கேத்தி இடையே இருமார்க்கங்களிலும் 3 சுற்றுகள் ஜாய்ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக முதல் சுற்று சிறப்பு ரெயில் ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டிக்கு வரும்.

2-வது சுற்று ரெயில் 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி வரும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வரும்.

3-வது சுற்று சிறப்பு ரெயில் மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி வரும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வரும். மேற்கண்ட சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News