உள்ளூர் செய்திகள்

சிவசேனா மாநில துணைத்தலைர் புலவஞ்சி சி.பி.போஸ் பேட்டி.

அக்னிபத் திட்டத்தை வரவேற்கிறேன் - புலவஞ்சி சி.பி.போஸ் பேட்டி

Published On 2022-06-21 08:33 GMT   |   Update On 2022-06-21 08:33 GMT
  • குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்தியிலே அக்னிபத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
  • அக்னிபத் திட்டத்தில் சேர்ந்து 4 வருடத்திற்கு பிறகு வெளிவரும் போது ஏறத்தாழ ரூ.12 லட்சத்தில் இருந்து 14 லட்சம் இருப்புத் தொகையாக தருகிறார்கள்.

மதுக்கூர்:

மதுக்கூரில் சிவசேனா மாநில துணைத்தலைவரும் காவி புலிப்படை நிறுவனத்தலைவரும் தமிழக இந்த பரிவார் மாநில அமைப்பாளருமான புலவஞ்சி சி. பி. போஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட அக்னிபத் திட்டத்தை நான் சார்ந்த அமைப்பின் சார்பாக வரவேற்கிறேன். குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்தியிலே அக்னிபத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

வெளிநாட்டு வேலைக்கு இளைஞர்கள் கடனைப் பெற்று வட்டிக்கு கடன் வாங்கி செல்கிறார்கள். திரும்பி வரும்போது வட்டியை மட்டுமே கட்டக்கூடிய சூழலிலும் தள்ளப்படுகிறார்கள் . சில போலியான ஏஜென்டுகள் அவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.

அக்னிபத் திட்டம்இந்தியா முழுவதும் வரவேற்கப்பட கூடிய திட்டம். இதை வைத்து அரசியல் செய்வது நல்லதல்ல.இந்த திட்டத்தில் சேர்ந்து 4 வருடத்திற்கு பிறகு வெளிவரும்போது ஏறத்தாழ ரூ.12 லட்சத்தில் இருந்து 14 லட்சம் இருப்புத் தொகையாக தருகிறார்கள். அதில் தொழிலும் செய்து கொள்ளலாம். அது தவிர மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் அவர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று உத்திரவாதம் வழங்குகிறார்கள்.

இதில் அரசியல் செய்யாமல் இளைஞர்களை தவறான வழியில் வழிநடத்தி விடாமல் அவர்களுக்கு நல்ல பாதையிலே வகுத்து தர வேண்டும். மாறாக போராட்டம் நடத்தி பொது சொத்தை சேதப்படுத்துவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News