ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரே ஆண்டில் ரூ.8.58 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள்
- 315 திட்டங்களை நிறைவேற்றி மகத்தான சாதனை
- ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், வட்டார வளரச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் உற்சாகம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.8.58 கோடி மதிப்பில் மக்கள் நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றி சாதனை படைத்து உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக மாயன், வட்டார வளரச்சி அலுவலர்களாக ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் பயன்பெரும் வகையில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதிதிட்டம் மூலம் 230 பணிகள், ரூ.523 லட்சம் மதிப்பிலும், அனைத்து கிராம ஆண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் 24 பணிகள் சுமார் ரூ.133 லட்சம் மதிப்பிலும், மாவட்ட ஊராட்சி பொது நிதி பணிகள் மூலம் 5 திட்டப்பணிகள் ரூ.24 லட்சம் மதிப்பிலும் மேற்கொள்ளபட்டு வருகிறது.
வட்டார வளர்ச்சி பொதுநிதி பணிகள் மூலம் 48 திட்டப்பணிகள் ரூ.94 லட்சம் மதிப்பிலும், கிராம வளர்ச்சி பொதுநிதி பணிகள் மூலம் 5 திட்டப்ப ணிகள் ரூ.4.60 லட்சம் மதிப்பிலும், நமக்குநாமே திட்டம் மூலம் 3 பணிகள், ரூ.77 லட்சம் மதிப்பில் நடந்து வருகின்றன.
ஊட்டியில் ஒட்டு மொத்தமாக ஒரே நிதி ஆண்டில் 315 மக்கள் நலத்திட்டப்பணிகளை ரூ.8.58 கோடி மதிப்பில் செயல்படுத்தி ஊராட்சி ஒன்றியம் சாதனை படைத்து வருகிறது.