காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போலி பட்டுக்களின் பரிசோதனை முடிவை வெளியிடாதது ஏன்? நெசவாளர்கள் கேள்வி
- கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் போலிபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- கைத்தறி சேலை எனக் கூறி விற்பனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பட்டுகள் மிகவும் பிரபலமானவை. இதனை பயன்படுத்தி சிலர் காஞ்சிபுரம் பட்டு என்று போலியான பட்டுக்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சிலமா தங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் போலிபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை பரிசோதனைக்காக அனுப்பி இருந்தனர். மேலும் விசைத்தறிகளில் தயார் செய்யப்பட்ட சேலைகளை கைத்தறி சேலை எனக் கூறி விற்பனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் பட்டுச்சேலை பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை என்று இதனை உடனடியாக வெளியிட வேண்டும் கைத்தறி சேலை நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து கைத்தறித்துறை இயக்குனரிடம் கேட்டபோது பட்டுச் சேலை பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்தவுடன் வெளியிடப்படும் என்றார்.