கொடைக்கானலில் மக்களை மிரட்டி வரும் காட்டெருமைகளால் பீதி
- கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், நகர்பகுதிக்குள் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
- சாலையில் காட்டெருமை உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், நகர்பகுதிக்குள் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் முக்கிய நகர்ப்பகுதிகளில் ஒன்றான ஏரிச்சாலை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிறைந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும்.
இந்நிலையில் ஏரிச்சாலையில் ஒற்றைக்காட்டெருமை திடீரென உலா வந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதனை வனத்துறை கூடுதல் கவனம் செலுத்தி பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் நகர்ப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.