உள்ளூர் செய்திகள்

 கோப்புபடம்

சமூக நல திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படுமா?

Published On 2022-06-10 05:13 GMT   |   Update On 2022-06-10 05:13 GMT
  • ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
  • சில திட்டங்களுக்கு மட்டும் ஆண்டு வருமான உச்சவரம்பு, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

திருப்பூர் ,

சமூகநலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற பெண், கலப்பு திருமணம், விதவை மறுமண திட்டத்துக்கு, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. விதவை மகள் திருமண உதவி, இலவச தையல் எந்திரம் திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் சில திட்டங்களுக்கானஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்தநிலையில் கிராம நிர்வாக அலுவலர், வருமான சான்று வழங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதற்காக, சில திட்டங்களுக்கு மட்டும் ஆண்டு வருமான உச்சவரம்பு, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இது குறித்து திருப்பூர் பொதுமக்கள் கூறுகையில், 'காப்பீட்டு திட்டம், கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. ஏழைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் சமூக நலத்திட்டங்களுக்கான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயாகவே தொடர்கிறது. தமிழக அரசு அனைத்து வகை சமூகநல திட்டத்துக்கான உச்சவரம்பை 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றனர்.  

Tags:    

Similar News