உள்ளூர் செய்திகள்

ஹோப்ஸ் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Published On 2023-10-07 08:59 GMT   |   Update On 2023-10-07 08:59 GMT
  • சாக்கடையை கடந்து சென்று அமரும் அவலம்
  • இருக்கைகள் சிதலமாகி உடைந்து விழும் அபாயநிலையில் உள்ளது

குனியமுத்தூர்,

கோவை ஹோப்ஸ் காலேஜில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் காமராஜர் ரோட்டில், மணிஸ் தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன்வழியாக காந்திபுரம், டவுன்ஹாலுக்கு எண்ணற்ற பஸ்கள் சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பயணிகளின் பயன்பாட்டிற்காக ஒரு நிழற்குடை அமைக்க ப்பட்டது. ஆனால் இதன் முன்பாக சாக்கடை ஓடுகிறது.

அதனை கடந்து தான் நிழற்குடைக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பயணிகள் யாரும் சாக்கடையை தாண்டி செல்வது இல்லை. சாலையில் நின்றபடி பஸ் ஏறி செல்லும் சூழ்நிலை உள்ளது.இந்த பகுதியில் ஏராளமான பள்ளி-கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காந்திபுரம் செல்வதற்கு இந்த நிழற்குடையை தான் பயன்படுத்த வேண்டி உள்ளது.

அப்படியே ஒருவேளை சாக்கடையை தாண்டி உட்காருவதற்கு சென்றால், அங்கு இருக்கை வசதிகள் மோசமான நிலையில் உள்ளன. உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே ஹோப் கல்லூரி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் முகம் சுளித்தபடி நிற்பதை பார்க்க முடிகிறது.

கோவை நகரின் முக்கியமான பிரதான சாலையில் அமைக்கப்பட்டு உள்ள பயணிகள் நிழற்குடை இந்த அளவு மோசமாக இருக்குமா? என்று பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

எனவே போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்து, சாக்கடை மேல் கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News