உள்ளூர் செய்திகள் (District)

பீடிக்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

முறையாக சம்பளம், போனஸ் வழங்காத பீடிக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

Published On 2022-06-19 07:19 GMT   |   Update On 2022-06-19 07:19 GMT
  • பிரபல தனியார் பீடி கம்பெனியில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர்.
  • பீடி சுற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பீடி கடையை முற்றுகையிட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து செட்டியூர் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் பீடி கம்பெனியில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம், விடுமுறை, ஊதியம், பொங்கல் மற்றும் தீபாவளி போனஸ், தொழிலாளர் வைப்பு நிதி தொகை என எதுவும் அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதனை கண்டித்து அங்கு பீடி சுற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பீடி கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் வாசலில் நின்றுகொண்டு பீடி கம்பெனி நிர்வாகத்தை கண்டித்து கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு உடனடியாக தலையிட்டு பீடி சுற்றி வரும் பெண்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.

பா.ஜனதா கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், தொழில் துறை பிரிவு ஒன்றிய தலைவர் சரவணன், இளைஞரணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் ஜோதி செல்வம், விளையாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் சக்தி கருப்பையா உள்ளிட்டோரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News