தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக உலக குருதி கொடையாளர் தினவிழா
- ஒரே ரத்ததான முகாமில் அதிக எண்ணிகையில் ரத்தம் வழங்கிய வகையில் இந்திய செஞ்சிலுவை சங்கமும் மற்றும் அனைத்து ரத்ததான கூட்டமைப்பும் பாராட்டு சான்றிதழ் பெற்றன.
- தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி நிலையத்தின் சார்பாக சுமார் 75 தன்னார்வ குருதி கொடையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
தென்காசி:
உலக குருதி கொடையாளர் தினவிழா ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி தன்னார்வ குருதி கொடையாளர்களை ஊக்குவித்து கவுரவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பாக தமிழ்நாடு முழு வதும் கொண்டாடப்பட்டது.
தனி மாவட்டம்
2019-ம்ஆண்டு தென்காசி தனிமாவட்டமாக அறிவிக்கப்பட்டபோதிலும் கடந்த ஆண்டு வரை நெல்லை மாவட்ட மருத்துவ கல்லூரி குருதி நிலையத்தால் இவ்விழா நடத்தபட்டது. தென்காசி மாவட்டம் தனியாக உருவாகிய நிலை யில் பல்வேறு அமைப்பி னரும், தன்னார்வ குருதி தான ஒருங்கினை ப்பாளர்களும் தென்காசியில் இவ்விழாவை நடத்த கோரிக்கை விடுத்தனர்.
2022-23-ம் ஆண்டில் அதிக அளவில் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தியமைக்கு தென்காசி ஜே.பி. கல்லூரி மற்றும் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கலை கல்லூரிகள் முதல் 2 இடங்களுக்கான விருதை பெற்றன. ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி சார்பில் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் செந்தில்குமரன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டனர். ஒரே ரத்ததான முகாமில் அதிக எண்ணிகையில் ரத்தம் வழங்கிய வகையில் இந்திய செஞ்சிலுவை சங்கமும் மற்றும் அனைத்து ரத்ததான கூட்டமைப்பும் பாராட்டு சான்றிதழ் பெற்றன.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி இணை இயக்குநர் பிரேமலதா வழிகாட்டுதலில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெஸ்லினின் சீரிய முயற்சியில் குறுகிய காலத்தில் உலக குருதி கொடையாளர் தினவிழா தென்காசி அரசு தலைமை மருத்துவமனை ரத்த நிலையம் சார்பாக நடத்தப்பட்டது.
75 தன்னார்வ கொடையாளர்கள்
தென்காசி மாவட்டத்தின் முதல் உலக குருதி கொடையாளர் விழாவின் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்தி ரன் கலந்து கொண்டு குருதி கொடையாளர்களை ஊக்குவித்து கவுரவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்தார். அதன்படி தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி நிலையத்தின் சார்பாக சுமார் 75 தன்னார்வ குருதி கொடையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து நோயாளி களுக்கு தானாக முன்வந்து அதிகமுறை ரத்ததானம் வழங்கிய செவலியர் ஏஞ்சல்ராணி, நுண்கதிர் நுட்புனர் சகாயராஐ் ஆகி யோர் கவுரவிக்கப்பட்டனர். தென்காசி அரசு ரத்த நிலையத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கியதற்காக இலத்தூர் மற்றும் கடையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விருதை பெற்றன.
விழாவில் நலப்பணிகள் இணைஇயக்குநர் பிரேமலதா தலைமை தாங்கினார். துணை இயக்ககுநர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தில்சேகர் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் தென்காசி குருதி நிலைய மருத்துவர் பாபு நன்றி கூறினார்.