உள்ளூர் செய்திகள்

முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள்

முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபாடு

Published On 2022-06-16 08:24 GMT   |   Update On 2022-06-16 08:24 GMT
உப்பனாற்றங்கரையில் இருந்து கரகம் எடுத்து வரப்பட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து வழிபட்டனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே திருக்கக்காவூர் மந்தக்கருப்பண்ண சுவாமி, ஏழைக்காத்தம்மன், காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாகவிழா நடைபெறாதநிலையில் இந்தாண்டுகோவிலின் திருவிழா கொடியேற்ற த்துடன் தொடங்கியது.

உப்பனாற்றங்கரையில் இருந்து கரகம் எடுத்து வரப்பட்டது. அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாலியை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து வைத்தனர்.

தொடர்ந்து கோவிலில் இருந்து பெரிய கரகத்தை எடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு உப்பனாற்று கரைக்கு சென்றனர்.

அங்கு பூஜைகள் முடிவடைந்த பின்னர் பெண்கள் அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடனை செலுத்திய பின்னர் கோவி லுக்கு வந்து வழிபட்டனர்.

Tags:    

Similar News