உள்ளூர் செய்திகள்

செல்லக்குட்டி அய்யனார் கோவிலில் யாகம் நடந்தது.

செல்லக்குட்டி அய்யனார் கோவிலில் யாகம்

Published On 2023-04-11 09:25 GMT   |   Update On 2023-04-11 09:25 GMT
  • 96 வகையான ஹோம திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள் கொண்டு மகா யாகம்.
  • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் செல்லூர் சாலையில் அமைந்துள்ள செல்லகுட்டி அய்யனார் கோவிலில் சம்வஸ்ரா யாகம் நடைபெற்றது.

21 வகையான சமித்து மற்றும் 96 வகையான ஹோம திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள், பழவகைகள், பட்டு கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

மகா தீபாராதனைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு கடத்து புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அய்யனாருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News