- அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை:
சீர்காழி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கண்ணாடி உடைப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மன்னன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் கண்ணாடியை கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.
இதில் அரசு பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் லேசான காயங்களோடு உயிர் தப்பினர். இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் சீர்காழி அருகே உள்ள தெற்கு தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் சூர்யா (வயது22) என்பவர் பஸ் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.