நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜ் மீண்டும் கோவை சிறையில் அடைப்பு
- கோகுல்ராஜ் (வயது 23) கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
- இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவ னர் யுவராஜுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுவராஜ் மீது நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதற்காக அவரை போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5- தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து போலீசார் யுவராஜை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்று மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.