செய்திகள்
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. #Parliamentelection
சென்னை:
17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
தேர்தல் நடத்தை விதி முறைகள் பற்றிய விவரம் வருமாறு:-
* மக்களுக்கு எந்தவித நிதி உதவிகளையும் அளிப்பதாக அரசு அறிவிக்கக்கூடாது.
* “அதைச் செய்வேன், இதைச் செய்வேன்” என்று புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை அள்ளி வீசக்கூடாது.
* புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது.
* அமைச்சரோ அல்லது அரசியல் நிர்வாகிகளோ எந்த திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டக்கூடாது. எந்தவித திட்டத்துக்காகவும் தொடக்க விழாக்களை நடத்தக்கூடாது.
* அரசு அல்லது அரசியல் கட்சிப் பணியாளர்கள் யாரும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கக்கூடாது.
* அரசுப்பணி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் எந்தவித தற்காலிக அல்லது நிரந்தர பணி நியமனத்தை, பதவி உயர்வை அரசு அளிக்கக்கூடாது.
* அமைச்சர்கள் தங்கள் அலுவலக பயணத்தை தேர்தல் பணியோடு இணைக்கக்கூடாது.
* அமைச்சர்கள் தேர்தல் பணிக்காக, அரசுக்கான அம்சங்களை பயன்படுத்தக்கூடாது. அரசு வாகனம், சுழல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.
* சாதி, மதம் தொடர்பான உணர்ச்சியை தூண்டும் விதத்தில் செயல்படக்கூடாது.
* பிரசாரத்தில் குற்றச்சாட்டுகள் அனைத்துமே, அடுத்த கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், பழைய பதிவுகள், பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.
* சாதி, மத உணர்வுகளை வாக்குக்காக பயன்படுத்தக்கூடாது.
* அரசு பணத்தை செலவழித்து ஆளுங்கட்சியினர் விளம்பரம் செய்யக்கூடாது.
* அரசு திட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பெயர், படம் இடம் பெறக்கூடாது. அப்படி இடம்பெறும் பெயர், படத்தை மறைக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெவ்வேறு தலைப்புகளில் இந்திய தேர்தல் ஆணையம் www.elections.tn.gov.in என்ற தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. #Parliamentelection

* கோவில், மசூதி, தேவாலயங்களை அரசியல் பிரசார ஸ்தலமாக பயன்படுத்தக்கூடாது.