செய்திகள்
சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம்- தேர்தல் கமிஷன் உத்தரவு
தினகரன் கட்சிக்கு சின்னம் ஒதுக்கும் வரை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என்று அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #AMMK #TTVdhinakaran #ElectionCommission
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
இந்த கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் உள்ளனர்.
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக டி.டி.வி.தினகரன் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் போது குக்கர் சின்னத்தில் நின்றார். அந்த குக்கர் சின்னம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.
இதன் காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 தினங்களாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நடந்தது.
டி.டி.வி.தினகரன் சார்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனுசிங்வி, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். தேர்தல் ஆணையம் சார்பில் அதன் வக்கீல் அமீர்சர்மா ஆஜராகி வாதாடினார். மேலும் தேர்தல் ஆணையத்தின் முதுநிலை முதன்மை செயலாளர் வில் பர்ட்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை என்பதால் சின்னத்தை ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை சுப்ரீம்கோர்ட்டு நீதி பதிகள் ஏற்றுக் கொண்டனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “மக்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தின்படி பிரஷர் குக்கர் சின்னத்தை தங்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கும்படி மனுதாரர்கள் கேட்பதை ஏற்க இயலாது” என்று அறிவித்தனர். இதனால் டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி இருக்கிறது.
இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைவருக்கும் வேறு ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கி தர உத்தரவிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், “அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு பொது சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். பொது சின்னம் ஒதுக்குவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை டி.டி.வி. தினகரனின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தேர்தல் ஆணையத்துக்கு சென்றார். அங்கு அவர் அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு விரைவில் பொது சின்னம் ஒதுக்கி அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு பரிசீலனை செய்தது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொது சின்னம் கொடுப்பது பற்றிய முடிவை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் தங்களது மனுக்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே குக்கர் சின்னத்துக்கு ஏற்பட்டுள்ள மவுசு காரணமாக பல்வேறு தொகுதிகளில் சுயேட்சைகள் குக்கர் சின்னம் வேண்டும் என்று தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் குக்கர் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
தமிழகம்-புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 19 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அவர்களுக்கு பொது சின்னம் கிடைக்காத பட்சத்தில் தனித்தனியே சுயேட்சைகளுக்குரிய 59 சின்னங்களில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்.
அப்படி இல்லாமல் பொது சின்னம் கிடைத்து விட்டால் 59 தொகுதிகளிலும் டி.டி.வி.தினகரனின் கட்சியினர் ஒரே சின்னத்தில் நிற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளான 29-ந் தேதி மாலை ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற இறுதி பட்டியல் தெரியவரும். அதன் பிறகே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்து இருப்பதால் சுயேட்சைகளுக்கு உடனடியாக சின்னம் ஒதுக்கப்படுமா? என்று கேள்விக்குறி எழுந்துள்ளது. மேலும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
29-ந் தேதி மதியத்துக்குள் தெளிவான முடிவு வந்து விட்டால் சின்னம் ஒதுக்கீடு சுமூகமாக முடியும். #AMMK #TTVdhinakaran #ElectionCommission

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று மதியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கும் வரை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.