- சத்துணவு ஊழியர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர். புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். கேரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சீத்தாலெட்சுமி பேசினார். ஊர்வலத்தை தொடங்கி வைத்து அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா பேசினார். தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது வழங்கப்படும் பணிக்கொடையை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமாகவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.