கதம்பம்
null

ஆகட்டும் பார்க்கலாம்..!

Published On 2024-11-07 12:15 GMT   |   Update On 2024-11-07 12:15 GMT
  • ஏழை மூதாட்டிகளுக்கு மாதம் எவ்வளவு தேவைப்படும் என்று விசாரித்தார்.
  • ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் எனக் கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

காமராஜர் முதல்வரான பிறகு கும்பகோணத்துக்கு ஒருமுறை வந்திருந்தார். காமராஜர் காரில் இருந்து இறங்கும் நேரத்தில் ஒருமூதாட்டி அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

இந்தச் சண்டையைப் பார்த்து விட்டார் காமராஜர் அவரை விடும்படி போலீசாரிடம் சொல்ல, அந்த மூதாட்டி காமராஜரை நெருங்கினார்.

`ஐயா, என்னைப்போல வயசானவங்க முடியாத காலத்துலயும் கூடை தூக்கிப் பிழைக்க வேண்டியிருக்கு. எங்களுக்கு ஏதாவது செய்யணும்' என்றார்.

`ஆகட்டும் பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.

சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாரே ஒழிய அந்த மூதாட்டி சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் வந்து மோதின.

கார் புறப்பட்டது. அதில் இருந்த அதிகாரிகளிடம் இந்த ஏழை மூதாட்டிகளுக்கு மாதம் எவ்வளவு தேவைப்படும் என்று விசாரித்தார்.

யோசித்த அதிகாரிகள், `இருபது ரூபாய் ஆகும்' என்றனர்.

சென்னை வந்து சேர்ந்ததும் மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் எனக் கணக்கெடுக்க உத்தரவிட்டார். உடனடியாக முதியோர் பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

-சிங்காரவேலு பாலசுப்பிரமணியம்

Tags:    

Similar News