இந்தியா

12 மணி நிலவரம்.. கூட்டி கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்..!

Published On 2024-06-04 06:52 GMT   |   Update On 2024-06-04 06:52 GMT
  • 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது
  • மதியம் 3 மணி நிலவரத்தை ஆராய்வதன் மூலமே வெற்றியை உறுதிபட கணிக்க முடியும்

Vஇந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியும் காங்கிரஸின் இந்தியா கூட்டணியும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் கடுமையான போட்டியை வழங்கி முன்னிலை வகித்து வருகிறது.

 

 முன்னிலை நிலவரம் எந்த நேரமும் மாறும் என்ற சூழலில் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது. எனவே தற்போதுள்ள நிலவரத்தை வைத்துக்கொண்டு வெற்றியை நிச்சயிக்க முடியாது. 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

10,000 என்ற அளவில் மட்டுமே வாக்கு வித்தியாசம் உள்ள இந்த 165 தொகுதிகளுள் 89 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 69 தொகுதிகளில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை கடந்த 4 மணி நேரமாக நடந்து வருகிறது. இன்னும் 3 மணி நேர வாக்கு எண்ணிக்கைக்குப் பின் மதியம் 3 மணி நிலவரத்தை ஆராய்வதன் மூலமே வெற்றியை உறுதிபட கணிக்க முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

Tags:    

Similar News