இந்தியா

அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்கள் மேம்படுத்த தீர்மானம்

Published On 2023-06-02 02:25 GMT   |   Update On 2023-06-02 02:28 GMT
  • நிலையான அல்லது நடமாடும் உணவகம் மூலம் பயணிகளுக்கு கேட்டரிங் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • கேட்டரிங் சேவைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அடிக்கடி மற்றும் அறிவிக்கப்படாத ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதுடெல்லியில் நேற்று ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்களை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய ரெயில்வேயில் தினமும் சுமார் 1.8 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். அவர்களுக்கு ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் போதிய உணவு வசதிகளை வழங்குவதற்கும், அவை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ரெயில்வே கேட்டரிங் சேவைகள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை மேற்கொள்வது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் கேட்டரிங் வணிகத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களும் தொடங்கப்பட்டுள்ளது.

நிலையான அல்லது நடமாடும் உணவகம் மூலம் பயணிகளுக்கு கேட்டரிங் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. 473 ஜோடி ரெயில்களில் பேன்ட்ரி கார்கள் அல்லது சிறிய பேண்ட்ரிகள் மற்றும் 706 ஜோடி ரெயில்களில் ரெயில்-பக்க விற்பனை வசதியுடன் உள்ளது.

இந்திய ரெயில்வேயின் ஜன் ஆஹார்ஸ் விற்பனை நிலையங்கள், உணவு பிளாசாக்கள் மற்றும் சிற்றுண்டி அறைகள் உள்பட 9,342 சிறிய மற்றும் 582 முக்கிய நிலையான அலகுகள் உள்ளன.

ரெயில்களின் கேட்டரிங் சேவைகளை பிரித்து, உணவு தயாரித்தல் மற்றும் உணவு விநியோகம் ஆகியவற்றுக்கு இடையே முதன்மையான வேறுபாட்டை உருவாக்குவதன் மூலம் ரெயில் பயணிகளுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கத்துடன், இந்திய ரயில்வே ஒரு கேட்டரிங் கொள்கையைக் கொண்டுள்ளது.

கேட்டரிங் சேவைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அடிக்கடி மற்றும் அறிவிக்கப்படாத ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி கம்லாபதி, குஜராத்தில் காந்திநகர் மற்றும் கர்நாடகாவில் சர் எம் விஸ்வேஸ்வரய்யா ஆகிய மூன்று ரெயில் நிலையங்கள் இதுவரை நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று நிலையங்களில் இருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், இந்திய ரெயில்வேயில் அமிர்த் பாரத் நிலைய திட்டம் ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் நீண்ட கால அணுகுமுறையுடன் தொடர்ச்சியான அடிப்படையில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News