இந்தியா
ராஜஸ்தானில் சோகம் - வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாப பலி
- ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
- பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தன.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் மழை சார்ந்த விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேரும், ஆல்வார், ஜெய்ப்பூர் மற்றும் பிகானீரில் தலா ஒருவர் பலியாகினர்.
மேலும் பலர் காயமடைந்தனர்.
டோங்க் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பயங்கரமான கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.
இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், புயல் காரணமாக கடந்த இரு தினங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.