நுழைவுத் தேர்வில் தோல்வி.. விரக்தியில் 7 வது மாடியில் இருந்து குதித்த 17 வயது மாணவி - பதறவைக்கும் வீடியோ
- 'என்னை மன்னித்து விடுங்கள், என்னால் இதை செய்ய முடியவில்லை'
- தேர்ச்சி பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சிறுமி தாயிடம் ஏற்கனவே கூறியுள்ளார்.
பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் JEE நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜாமியா நகரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் நடந்த JEE நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டுள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த மாணவி, 'என்னை மன்னித்து விடுங்கள், என்னால் இதை செய்ய முடியவில்லை, என்னால் JEE பரீட்சையை ஜெயிக்க முடியவில்லை' என்று தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீடு உள்ள 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் மாடியில் இருந்து குதித்து கீழே விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படடுத்தி வருகிறது.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகிறனர். தான் இந்த பரீட்ச்சையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உயிரிழந்த சிறுமி தனது தாயிடம் ஏற்கனவே கூறியிருந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.