இந்தியா (National)

அசாமில் 1 வருடத்தில் 171 என்கவுன்டர்கள்.. குறிப்பிட்ட சமூகத்துக்கு குறியா? - சுப்ரீம் கோர்ட் கேள்வி

Published On 2024-10-23 14:50 GMT   |   Update On 2024-10-23 14:50 GMT
  • கவுகாத்தி நீதிமன்றத்தில் பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது.
  • ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல

அசாமில் ஒரே வருடத்தில் போலீசாரால் 171 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த 2021-22 காலக்கட்டத்தில் அசாம் போலீசால் 171 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. 

இந்த என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடந்த வேண்டும் என்றும் கவுகாத்தி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வின் முன் தற்போது விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல, காவல்துறை குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைக்கின்றனரா? தங்களது அதிகார வரம்பை மீறுகின்றனரா? என்பதை அசாம் போலீஸ் விளக்க வேண்டும் என்றும் என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News