இந்தியா

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2024-09-14 04:54 GMT   |   Update On 2024-09-14 04:54 GMT
  • பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
  • போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீர்:

காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் விபன் குமார், அரவிந்த் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் களம் இறங்கியுள்ளனர். அங்கு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே கதுவா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Tags:    

Similar News