டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதி
- ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழியை்த தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்லவே அனுமதி இல்லை.
- மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி மெட்ரோவில் மது குடிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழியைத் தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்தது. திருத்தப்பட்ட பட்டியலின்படி, ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸில் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது" என்று கூறியது.
மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் டெல்லி மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.