இந்தியா

குஜராத்தை சுழற்றி அடித்த கனமழை: மின்னல் தாக்கி 20 பேர் பலி

Published On 2023-11-27 06:21 GMT   |   Update On 2023-11-27 06:21 GMT
  • திடீரென 50 முதல் 117 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
  • ஏறக்குறைய குஜராத் முழுவதும் என்ற வகையில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் தற்போது மழை சீசன் கிடையாது. இருந்த போதிலும் நேற்று எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமாகின. மேலும், மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத்தில் உள்ள 252 தாலுக்காவில் 234 தாலுக்காவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 50 முதல் 117 மி.மீ. வரை மழை பெய்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, "மின்னல் தாக்கி பலர் உயிரிழந்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் உள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News