செய்திகள்

தந்தை தலையை துண்டித்து ஊர்வலம் சென்ற மகன்

Published On 2016-10-18 05:37 GMT   |   Update On 2016-10-18 05:37 GMT
மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சொத்து தகராறில் தந்தை தலையை துண்டித்து ஊர்வலமாக கொண்டு சென்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாகர்:

மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ளது செம்ரா மோஜா கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 67). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இருவர் மூலமும் தலா ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதில் மூத்த மனைவியின் மகன் மனோகர் (32).

பிரகலாதனுக்கு 16 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனது பங்கை பிரித்து கொடுக்கும்படி மனோகர் கேட்டு வந்தார்.

இது தொடர்பாக தந்தை- மகனுக்கிடையே தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரகலாதன் வயலுக்கு நடந்து சென்ற போது, மனோகர் இடைமறித்து அவருடன் தகராறு செய்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த மனோகர் கோடாரியால் தந்தையை வெட்டி கொலை செய்தார். பின்னர் தலையை தனியாக துண்டித்து எடுத்து கையில் பிடித்தபடி ஊர்வலமாக சென்றார்.

இதை பார்த்தவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News